Thursday, July 17, 2008

நெஞ்சாங் கூட்டில் நீயே

நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே!
நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டிப்போட்டுக் காதல் செய்கிறாய் - முதுகில்
கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல்தானே! இது காதல்தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை

(நெஞ்சாங்கூட்டில்......)

ஏ......விண்ணைத் துடைக்கின்ற முகிலை
வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை
என்னைத்தேடி மண்ணில் வரவழைத்து
உன்னைக் காதலிப்பதாய் உரைத்தேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும் சிறு புல்லுக்கும்
காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்
இன்னும் சொல்லவில்லையே.... இல்லையே
லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க
ஒத்த சொல்லும் சிக்கவில்லை எதனாலே
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிவிட்டு
பட்டினியாய்க் கிடப்பாளே அதுபோலே...

(நெஞ்சாங் கூட்டில்........)

ஏ....... சின்னச் சின்னச் செல்லக் குறும்பும்
சீனிச்சிரிப்பும் என்னைச் சீரழிக்குதே
விறுவிறுவென வளரும் பழம் எந்தன்
விரதங்களை வெல்லுதே
உன்னைக் கரம் பற்றி இழுத்து
வளை உடைத்து காதல் சொல்லிடச் சொல்லுதே
வெட்கம் இருபக்கம் மீசை முளைத்து
என்னைக் குத்திக்குத்தியே கொல்லுதே
காதல் எந்தன் வீதி வழி கையை வீசி வந்த பின்னும்
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே
பிப்ரவரி மாதத்துக்கு நாள் ஒன்று கூடி வர
ஆண்டு நாலு காத்திருக்கும் அது போலே...

(நெஞ்சாங் கூட்டில்........)


No comments:

செந்தில் செல்லம்மாள் - பாகம் 1

செந்தில் செல்லம்மாள் - பாகம் 2

செந்தில் செல்லம்மாள் - பாகம் 3