படிச்சவன்தான்யா இப்ப ஜாதி வெறி பிடிச்சு அலையுறான்.
M.R.ராதவோட ஒரு சூப்பர் வசனம் இருக்கு -- "வெள்ளைக்காரன் நீராவில கப்பல் விடுரான்.. ரயில விடுரான்... நீங்க என்னடான்னா இட்லியும், புட்டும் செய்ஞ்சு வயித்துகுள்ள விடறீங்க..."
அதேமாதிரி, ஆர்குட்ங்கிறது நண்பர்களுக்கிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்த கொண்டு வந்தாய்ங்க. நம்மாளுங்க, அதுல ஏறக்குறைய எல்லா ஜாதிக்கும் பல ஜாதி சங்கம் திறந்திட்டாய்ங்க.
இன்ன ஜாதி பசங்க, இன்ன ஜாதி பொண்ணுங்க எல்லாம் வாங்க... ஜாலியா இருப்போமாம்.... (Let us have fun).
என்ன கண்ராவி இது.
பில்கேட்சு இல்லாங்காட்டி வாரன்பஃபெட் எல்லாம் இத கேள்வி பட்டாங்கன்னா, வாயால மட்டுமாலே சிரிப்பான்...
என்ன கொடுமை சரவணன் இது...
ஜாதிகள் இல்லையடி பாப்பா...
குல தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்...
இது பாப்பாவுக்கு மட்டுமில்ல... நமக்கும் தான்...
1 comment:
அடப்பாவிகளா,
இணையத்தை இதுக்கும் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டனுங்களா.
ஹூம்.
நான் ஆர்குட் பக்கம் செல்வதில்லை
Post a Comment