Monday, February 25, 2008

பத்து ரூபாய் நோட்டு - உன் கிட்ட சொல்ல மறந்தது!!!

தோழி, உன் கிட்ட சொல்ல மறந்த/மறைத்த பல விசயத்துல இதுவும் ஒன்னு. சொன்னா, நீ வருத்தப் படுவேன்னு தெரியும். அதான், சொல்லாம விட்டுட்டேன். ஆனாலும் ஒரு நாள் உன்கிட்ட சொல்லுவேன்னு தெரியும்.

என்னோட 4வது செமஸ்டர், வழக்கம் போல, வேணுகோபால் சார் கிட்ட இலவசமா கணக்கு டியூசன் படிச்சுட்டு பஸ் பிடிக்க வந்தேன். ஏற்கனவே 12:30 மணி ஆச்சு. அரசினர் விடுதிக்கு, 2 மணிக்குள்ள போய்ட்டா, சாப்பாடு கிடைச்சுறும். ராத்திரி நைட் ஷிப்டுக்கு போய்ட்டு வந்து அவசரத்துல கிளம்பின போது சரியா சாப்பிடல. ஐஐடி (சென்னை) நிறுத்ததிலிருந்து 47D புடிச்சு திருவான்மியூர் வந்து சேர 1 மணி ஆச்சு.

பசி. பையில இருந்த அந்த பத்து ரூபாயை தடவிக் கொண்டேன். இன்னும் 10 நாளுக்கு இது போதும் தான். மனசுல கொஞ்சம் தெம்பு வந்தது. பஸ் வந்தா 30 நிமிடத்துல, பெருங்குடிக்கு அடுத்த ஸ்டாப் சீவரம் போயிரலாம். அப்புறம் ஒரு 10 நிமிட நடை, ஹாஸ்டலுக்கு போயிரலாம். 18B பஸ் வந்தது. வழக்கம் போல ஸ்டாப்புல இருந்து 20 அடி தள்ளி போய் நின்னது. ஓடி ஏறியதும், கண்டக்டரின் கடுமையான வார்த்தை "சில்லரை இருந்தா மட்டும் ஏறு...". சார், பத்து ரூபாய் மட்டும் தான் இருக்கு. இறங்குடா... உனக்கு மட்டும் தனியா சொல்லனுமா. ஏமாற்றத்துடன் இறங்கி, பொட்டி கடையில கேட்டேன். "சில்ர இல்லபா...". 21H வந்துருச்சு. அடிச்சு புடிச்சு ஏறுனா, திரும்பவும் சில்லரைக்காக இறக்கி விடப்பட்டேன்.

மனசுக்குள்ள ஒரு சின்ன வலி. பசி... இரவு தூங்காததோடு பசி மயக்கமும் சேர்ந்து கொண்டது. மணி 1:30 ஆச்சு.18B கிராஸ் வந்தது. கண்டக்டரின் "சில்லர இருந்தா ஏறு" காட்டு கத்தலையும் கண்டுக்காம உள்ள போய் ஓரமா நின்னுகிட்டேன். டிக்கட் கேட்டு வந்தவரிடம், பத்து ரூபாயை கொடுத்தேன். "ஏன்டா, உங்களுக்கு ஒரு தடவ சொன்னா தெரியாதா? எங்க இருந்துடா வந்து உயிர வாங்கறீங்க?" கடுப்போடு டிக்கட் கொடுத்தார். "சார், உங்ககிட்ட இருக்கற சில்லரய கொடுங்க போதும்" - பம்மினேன். அவர் கிட்ட சில்லர இருந்தும், ஏன் இப்படி கத்துறார். கந்தன் சாவடி வந்தது. "சார், சில்லர பாக்கி" - "நீ எப்படி வாங்கிறன்னு பார்கிரேன்" - திமிரான பதில்தான் கிடச்சது. மனசுக்குள்ள ஒரு சின்ன உதறல். கடைசி பத்து ரூபாய். பாக்கி வாங்காம, இறங்க கூடாது. இதுதான் இந்த மாதம் மீதி இருக்குற 10 நாளைக்கும்.

சீவரம் ஸ்டாப் வந்தது. "சார், சில்லர பாக்கி" பதறாமல் கேட்டேன். கண்டக்டர்- "நீ முதல்ல இறங்குடா...". இறங்கினால் கொடுப்பார் என, பஸ்ஸிலிருந்து இறங்கினேன். கண்டக்டர் டபுள் விசில் கொடுக்க பஸ் புறப்பட்டது. எனது கடைசி பத்து ரூபாய்... இந்த மாதம், இன்னும் 10 நாட்கள் செலவுக்காக இருந்த்து. மனசு பதற ஆரம்பித்தது. கத்திக் கொண்டே, பஸ்ஸோடு ஓட ஆரம்பித்தேன். திரும்ப வந்து சீவரம் பஸ் ஸ்டாப்புல உட்கார்ந்தேன். மனசு கனத்து போயிருந்தது. 30 நிமிடம் கழித்து, பிடிசி குவார்ட்ரஸிலிருந்து பஸ் வந்தது. ஆனா வேற கண்டக்டர்.

மனதிலிருந்த வலியோடு, ரோட்டு ஓர அனுமார் கோவில்ல போய் உட்கார்ந்தேன். கண்ணீர் அடக்க மாட்டாமல் கொட்டியது. பசியில் வயிறு எரிந்தது. மனசு அந்த கண்டக்டர் மீது சாபம் கொடுத்தது. தோழி, நீ சொன்ன "திக்கற்றவர்களுக்கு தெய்வமே துனை" நினைவிற்கு வந்தது. அந்த கண்டக்டர் மீதான கோபம் போனது. அவரை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டேன்.

ஹாஸ்டலுக்கு போன போது, ஒரு நண்பன், நான் சொல்லாமலே எனக்கு சாப்பாடு எடுத்து வைத்திருந்தான். ஆனா, எனக்கு அடுத்த 10 நாள் செலவிற்கு என்ன செய்வது என்ற எண்ணத்தில், சாப்பாடை பார்த்துக் கொண்டே பசியோடு கவலையில் உறங்கிப் போனேன். இதோ அமெரிக்காவில் அலுவலக ரீதியாக ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடரப்பவும், எப்பவும் நான் யாருங்கிற அடையாளத்த மறக்கல...

அம்மா, நீங்க சொன்னது நிஜம் "பொருத்தார் பூமி ஆள்வார்"

5 comments:

Unknown said...

நெஞ்சைத் தொட்ட பதிவு

sri said...

"இதோ அமெரிக்காவில் அலுவலக ரீதியாக ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடரப்பவும், எப்பவும் நான் யாருங்கிற அடையாளத்த மறக்கல...
"

You deserve everything that comes ur way friend

ராஜி said...

/*இதோ அமெரிக்காவில் அலுவலக ரீதியாக ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடரப்பவும், எப்பவும் நான் யாருங்கிற அடையாளத்த மறக்கல...*/

great!.By reading ur blogs i came to know that you r proving the above ststement in your actions too.Congrats.

Anonymous said...

I read your post. It was nice, particularly the lalith kumar article. A great women behind a men.

I want to know one information from you that, I want to add a Live Traffic feed and counting in my blog. So please help me to do this.
Thanks
Regards
Ravisankar

Note: my blog add: 1. iniyaindiyavilravi.blogspot.com
2.interestingindian.wordpress.com

sakthivel said...

இனி ஒரு விதி செய்...
வணக்கம்... உங்கள் பத்து ரூபாய் நோட்டு பதி படித்தேன். மனது கனத்தது.
நீங்கள் என்றோ அனுபவித்ததை இன்றும் பலர் அனுபவித்தி கொண்டு தான் இருக்கின்றார்கள்...
ஏன் இப்படி?... என்ன தான் காலமாற்றம் வந்தாலும்... மனித மனம் மட்டும் இன்னும் மாறவில்லை...
என்று திருந்தும் இந்த மதிகெட்ட மானுட வர்க்கத்தின் அதிகார ஆணவ எண்ண்ம...

இன்னும் ஒரு விசயம் ... விவசாய புரட்சி வேண்டும் பதிவு படித்தேன்...
உங்கள் எண்ணம் வரலாறு படைக்க உதவட்டும்...
இன்று விவசாயிகள் அரசாங்கத்தாலேயே ஏமற்றம் படுகின்றனர்... என்ன வென்று சொல்ல....


எனது முயற்சியும் விவசாயத்தில் விவசாயிகளை இணைத்து புது புரட்சி ஏற்படுத்த வேண்டும்... என்பது தான்...

நான் கடந்த 4 வருடங்களில் எத்தனையோ விவசாயிகளை பார்த்திருப்பேன்... அவர்களின் எண்ணங்களை கேட்டு இருப்பேன்.

அவர்களின் எண்ணங்கள் மனநிலைகள் வருத்தத்தையே வெளிப்படுத்தியது... என்பதை உணர்ந்தேன்..

விவசாய தகவல் களை இனிய தமிழில் அளிக்கும் பொருட்டு வலைதள அமைப்பு முயற்சியில் உள்ளேன்... இந்த வலைதளத்தில் தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அளிக்க உள்ளோம்...

இந்த வலை தளம் குழு அமைவு கருத்து பரிமாற்றத்தையும் அளிக்க உள்ளது... உங்களின் மேலான வலைதள வடிவமைப்பு பற்றிய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்...

எனது மின்னஞ்சல்...

valarumsakthi@gmail.com

செந்தில் செல்லம்மாள் - பாகம் 1

செந்தில் செல்லம்மாள் - பாகம் 2

செந்தில் செல்லம்மாள் - பாகம் 3